2021 மே 10, திங்கட்கிழமை

மீள்குடியேறுபவர்களுக்கு சொந்த காணிகளை மீள ஒப்படைக்க செயற்த்திட்டம்

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் மீள்குடியேறி வருபவர்களின் சொந்த காணிகளை மீள ஒப்படைப்பதற்கும் குறித்த காணிகளுக்கான நன்டை பத்திரம், உறுதி மற்றும் அனுமதி பத்திரம் என்பவற்றை வழங்குவதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில்  பிம் சவிய என்ற காணி உரித்து பதிவுக்கான தேசிய நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்டடு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு. மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் கிராமசேவகர் பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றது.

இத்திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களை www.bimsaviya.gov.lk> www.survey.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X