2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; ஒருவர் பலி; அறுவர் கைது

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கபில்)

வவுனியா, ஓயார்சின்னக்குளத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில், யோகாநந்தன் கமல்ராஜ் (வயது 40) என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவத்தை அடுத்து, மோதலுடன் தொடர்புடையதான 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசிறி பண்டார தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 'ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டுவிழா வைபவமொன்றில் கலந்துகொண்ட சிலருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக உருவெடுத்துள்ளது என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
 
சம்பவத்தில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான ஓயார் சின்னக்குளம் இரும்பு வர்த்தகராக கமல்ராஜ், சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்கா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதான மேலும் சிலரைத் தேடி வலைவீசியுள்ளதாக வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .