2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக செவி கடன் திட்டம் அறிமுகம்.

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

இளைஞர் விவகார மற்றும் திரண் அபிவிருத்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செவி கடன் திட்டம் - தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக மன்னார் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட உதவிப்பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்தார்.

(N.V.Q) தொழில் பயிற்சி பெற்றவர்களும், 8 நாள் தொழில் பயிற்சி பெற்றுக்கொண்டவர்களும் இதற்கு தகுதிபெற்றவர்கள். மேற்படி கடன் திட்டமானது அரச வங்கியூடாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்படி தொழில் பயிற்சி மற்றும் பயிற்சியை பெற்று கடன் பெற விரும்புவேர் மன்னார், தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட உதவிப்பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X