2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கிளிநொச்சி மாவட்ட எல்லைகளை மீளாய்வு செய்யும் ஆலோசனை கூட்டம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 05 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்டத்தில் எல்லைகளை மீளாய்வு செய்து புதிய எல்லைகளை வகுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,  பச்சிலைப்பள்ளி, புநகரி, கண்டாவளை, கரைச்சி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளின் செயலர்கள், கிராம அலுவலர்கள், பொதுமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் சிறினிவாசன், உதவி அரசாங்க அதிபர் தலைமைச் செயலகம், திருமதி ஜெயராணி மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் எனப் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஒரு புதிய பிரதேச செயலர் பிரிவை அமைக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கொள்கை அளவில் இணங்கியுள்ளதாகவும் இங்கே தெரிவிக்கப்பட்டது. கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவை அக்கராயன் பகுதியை மையப்படுத்தி கரைச்சி மேற்கு பிரதேச செயலர் பிரிவு என்றும் மற்றைய பிரிவு கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவு எனவும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் இது தொடர்பான இறுதித்தீர்மானம் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள பொது நிர்வாக அமைச்சின் எல்லைகள் மீளாய்வுக் கூட்டத்தின் போதே எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--