2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வீதியோர வியாபாரத்தை நிறுத்துவதற்கு வவுனியா நகர வரியிருப்பாளர் சங்கம் தீர்மானம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

வீதியோர வியாபாரத்தினை நிறுத்தக்கோரும் தீர்மானமொன்று வவுனியா நகரசபைக்குட்பட்ட வரியிருப்பாளர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வவுனியா நகரில் வீதியோர வியாபார நடவடிக்கையால் நகர மக்களது சாதாரண வாழ்க்கைமுறை மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றது.

அத்துடன், வீதி செரிசல்கள், விபத்துக்கள் போன்றவை ஏற்பட்டு மக்கள் மிகவும் பாதிப்படைகின்றார்கள். எனவே இத்தகைய சட்டபூர்வமற்ற வியாபார நடவடிக்கைகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அடுத்து கூடவுள்ள நகரசபை மாதாந்த கூட்டத்தில் இத்தீர்மானங்களை சமர்ப்பித்து சரியானதும் நேர்மையானதுமாக தீர்மானங்கள் எடுத்து வவுனியா நகர வரியிருப்பாளர்களின் உரிமைகளையும் நன்மைகளையும் பாதுகாப்பீர்கள் என நம்புகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இக்கூட்டத்தில் மேலும் 10 தீர்மானங்களாக முதலாம் குறுக்குத்தெரு 2ஆம் குறுக்குத்தெரு, பண்டாரிகுளம் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக புனரமைக்கப்பட வேண்டும். அத்துடன் அவ்வொப்பந்தங்கள் கேள்விப்பத்திரங்கள் மூலம் அப்பகுதி சனகமூக நிலையங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வழங்கப்படவேண்டும்.
நகரசபை மண்டபத்தை வரியிருப்பாளர்களுக்கு வாடகைக்கு விடும்போது அங்கு சேவை நோக்கமே காணப்பட வேண்டும்.

அத்துடன் ஏனை மண்டபங்களை விட குறைந்த கட்டணமே அறவிடப்பட வேண்டும். நகரசபையால் வழங்கப்பட்ட கடைகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்படும்போது ஆகக்கூடுதலாக 5 வருட வாடகை முற்பணமே அறவிடப்பட வேண்டும். வீதிகள் மற்றும் கட்டடங்களக்கு பெயர் சூட்டும் போது முறையே பத்திரிகையில் அறிவிப்பு கொடுக்கப்பட்டு குறித் பகுதியில் வசிக்கும் பெரியவர்கள் மற்றுமு; சமூக நிறுவனங்களுடன் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

வவுனியா நகரில் உள்ள உணவகங்களில் சுகாதாரத்தை பேணுவதற்கு சகல கடைகளுக்கும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பூந்தோட்டத்தில் உள்ள நகரசபைக்கு செந்தமான கிணறை துப்பரவு செய்து அதை பாவணைக்கு ஏற்றதாக கொண்டு வருதல் வேண்டும். கலைமகள் சனசமூக நிலையத்திற்கு வழங்கப்பட்ட காணியானது தினம் தினம் அயலவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் உடனடியாக அக்காணியை பாதுகாக்கும் நோக்கில் சுற்ற மதில் கட்டித்தரப்படதல் வேண்டும்.
 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய கழிவு நீர் செல்வதற்கான வடிகால் அமைப்பு ஒன்றை உருவாக்கழி கொடுத்தல் வேண்டும். வவுனியா நகரசபையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பாரபட்சமின்றி நகரசபைக்குட்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளினதும் கேள்விப்பத்திரங்கள் உரிய முறையில் கோர வேண்டும். பூந்தோட்டம் குளக்கட்டு வீதியை பொது மக்கள் பாவனைக்கு திறந்து விடுதல் வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு நகரசபையின் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--