2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மன்னாரில் சிறுமியை பாலியல் துஸ்பிரையோகம் செய்த சந்தேகநபர் கைது

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் - தோட்டவெளி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை வாய் பேச முடியாத சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்திய 65 வயதுடைய வயோதிபரை மன்னார் பொலிஸார் இன்று கைது செய்தள்ளனர்.

தோட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய வாய் பேச முடியாத குறித்த சிறுமி அங்குள்ள கடைக்குச் சென்றபோது, கடை நடத்துனரின் சகோதரரான 65 வயதுடைய வயோதிபர் கடைக்கு பின்புரமாக சிறுமியை அழைத்துச் சென்று துஸ்பிரையோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அவருடைய பெற்றோரிடம் மேற்படி சம்பவத்தை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளுக்கும் மன்னார் பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டார். குறித்த வயோதிபர் தலைமறைவான நிலையில் இன்று சனிக்கிழமை மன்னார் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--