2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மன்னாரில் மீனவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியிலுள்ள புதுக்குடியிருப்பு தென்கடற்கரையோரத்தில் மீனவரொருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த எ.முகமது சுல்த்தான் (வயது 63) என்பவரது சடலமென ஏனைய மீனவர்கள் அடையாளம் காட்டினர்.

குறித்த மீனவர்  வியாபார  நோக்கமாக இக்கடற்கரைப் பகுதிக்கு வழமையாக வந்து செல்வதாகவும் அவ்வாறே நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் குறித்த மீனவர் இக்கடற்கரைப் பகுதிக்கு வியாபார நோக்கத்திற்காக வந்தபோதே உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலத்தைப் பார்வையிட்ட மன்னார் நீதவான் கே.ஜீவராணி, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--