Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கபில்)
'நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டம்' என்ற தொனிப்பொருளில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமும் இணைந்து நடத்திய நடமாடும் சேவை வவுனியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்தகால யுத்தம் காரணமாக இந்தியா சென்று அங்கு பிறந்த குழந்தைகள் இலங்கை வந்த நிலையில் அவர்களுக்கு பிரஜாவுரிமை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்த நடமாடும் வவுனியா பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்டது.
இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய பலர் தமது பிள்ளைகளுக்கான பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்தனர்.
இதன்போது குடியகழ்வு மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் இந்த நடமாடும் சேவையில் பங்குபற்றிய மக்களுக்கு பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் ந.திருஞானசம்பந்தர், குடியகழ்வு மற்றும் குடிவரவு திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ந.திருஞானசம்பந்தர் தெரிவிக்கையில்,
"நிவாரணத்தை வைத்துக்கொண்டு அடிப்படை உரிமைகளைப் பெறமுடியாது. அதேபோல் அடிப்படை உரிமைகள் இல்லாது நிவாரணங்களையும் பெறமுடியாது. பிரஜாவுரிமை இல்லாதவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் தோன்றும். கடந்த காலங்களில் இது பற்றிய போதிய அறிவின்மையால் பலர், பிறப்பு சான்றிதழை மாத்திரம் பெற்றுக்கொண்டால்போதும் என்ற எண்ணத்தோடு இருந்துள்ளனர். ஆனால் அவ்வாறான குழந்தைகளுக்கு 16 வயதில் அடையாள அட்டையை பெற முயற்சித்தபோதுதான் பிஜாவுரிமையின்மையின் தாக்கத்தை அறிந்து கொண்டுள்ளனர்.
தற்போது எம்மால் இயன்றளவிற்கு இவர்களுக்கான குடியுரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளால் பலர் இலங்கை குடிமக்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். எமது கிராம அலுவலர்களால் மாத்திரம் இவ்வாறான செயற்பாடுகளை செயற்படுத்த முடியாது. எனவே தான் அங்கு ஏற்படக்கூடிய செலவீனங்களையும் ஏனைய விடயங்களுக்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இதனை முக்கிய பணியாக மேற்கொள்கின்றன. எதிர்காலத்தில் அனைவருக்கும் பிஜாவுரிமையை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை பிரதேச செயலகமும் மாவட்ட செயலக நிர்வாகமும் இணைந்து மேற்கொள்ளும்" என்றார்.
.jpg)
.jpg)
8 hours ago
9 hours ago
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
25 Nov 2025