Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத் றஹ்மதுல்லா)
'வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய முற்படும்போது வெளிநாடுகள் நிதி வழங்குவதிலிருந்து விலகிக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது. இந்த பணிக்கு எதிராக சில அரச அதிகாரிகளும் செயற்பட்டுள்ளதையும் அறிய முடிகின்றது' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஸபக்ஷ தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின், மடு பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் வங்கியின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"இந்நாட்டில் இன்று மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தியுள்ளார். அந்த சமாதான சூழலை குழப்பி மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த சில சக்திகள் செயற்படுவது குறித்தும் தகவல் கிடைத்துள்ளன. எமது ஜனாதிபதியினதும், பாதுகாப்பு தரப்பினரதும் பலம் இருக்கும் வரை அதற்கு ஒரு போதும் இடம்கொடுக்க மாட்டோம்'' என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றும் போது,
வடமாகாண முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள தடைகள் அகற்றப்படல் வேணடும். இடம்பெயர்ந்த சகல மக்களையும் சமமாக பார்க்க வேண்டும், நிலையான இடமாற்றம் கொள்கையொன்றை ஏற்படுத்த வேண்டுமென்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
neethan Monday, 17 October 2011 09:13 PM
அமைச்சர் அவர்களே , அரச அதிகாரிகள் முஸ்லிம் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா? புரியவில்லையே? இதுவும் ஒரு அரசியல் சிண்டு முடிவா?
Reply : 0 0
abdel Monday, 17 October 2011 10:16 PM
ஈரான் ஜனாதிபதின் பணமும் பாகிஸ்தானின் பொருளும் அரபு நாடுகளின் அரவணைப்பும் இஅரசுக்கு சுகமாக இருக்கிறது. முஸ்லிம்களின் விவகாரம்தான் கஷ்டமாக இருக்கிறதா?
Reply : 0 0
ibnu aboo Tuesday, 18 October 2011 02:33 AM
விடுதலைப் புலிகள் இந்நாட்டுக்கு ஏற்படுத்திய பயங்கரவாத நாசகாரத்தின் பாதிப்புகளின் பங்காளிகளான முஸ்லிம்களின் நலனுக்கு அரசு எவ்வளோவோ செய்யவேண்டியுள்ளது அதிலும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடி ஏற்றம் எல்லாவற்றிலும் முதன்மையான கடப்பாடாகும்.
Reply : 0 0
easternguy Tuesday, 18 October 2011 02:39 AM
அப்பா இவ்வளவு கொடுத்த பணம் எல்லாம் எங்கேயோ? கூட இருந்து ஜால்ரா அடிக்கும் எம்பிக்களுக்கு தெரியாதா ??
Reply : 0 0
maazeen Tuesday, 18 October 2011 03:54 PM
எல்லாவத்தையும் தகர்த்தெறிந்து முஸ்லிம்களின் மீள் குடிஏற்றத்தை ஆரம்பிக்கவும் ரிஷாத் சார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago