2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் இளைஞர் விருது வழங்கும் விழா

Kogilavani   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர் விருது வழங்கும் விழா-2011 நேற்று சனிக்கிழமை மன்னார் வலயக் கல்விப்பணிமனையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகான பணிப்பாளர் திருமதி.எஸ்.விமலேஸ்வரி, அமைச்சர் றிஸாட் பதீயுதின், நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மீள் எழுச்சித்திட்ட பிரதித்திட்ட பணிப்பாளர் றொபேட் பீரிஸ், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதீயுதின்;, இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் பாரீஸ் உற்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். இதன் ஏற்கனவே நடாத்தப்பட்டநிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்படி விருந்தினர்களினால் சான்றிதழ்களும் வெற்றிக்கேடையமும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, வெற்றிபெற்ற இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வெற்றிக்கேடையமும் வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X