2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிப்பு; வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியா கொரப்பத்தானை வீதியிலுள்ள கட்டண குளியல் அறை மற்றும் மலசலகூடம் அமைந்துள்ள வளாகத்தில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்  உணவுப்பொருட்களையும் உணவுப்பொருட்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் தள்ளுவண்டில்களையும் நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர் அடங்கிய குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

கொரப்பத்தானை வீதியிலுள்ள கட்டண குளியல் அறை மற்றும் மலசலகூடம் அமைந்து வளாகத்தில் வீதியோர வியாபாரிகளால் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுவதாக நேற்று வியாழக்கிழமை கிடைத்த தகவலையடுத்து, நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் அடங்கிய குழுவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மேற்கண்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இந்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் சுகாதாரப் பிரிவு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .