2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வட பகுதியில் பெய்யும் கடும் மழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 25 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வட பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தமது விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் குளங்கள் பெருக்கெடுத்துள்ளமையினால் குளத்து நீர் வயல் நிலங்களினூடாக அடித்து செல்வதால் பயிறிடப்பட்ட தானியங்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் உழுந்து, பயறு மற்றும் கௌப்பி பயிர்ச்செய்கை வெள்ளம் காரணமாக அழிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல பகுதியிகளில் முதல் முறையாக விவசாயம் செய்ய முற்பட்ட நிலையில் இவ்வாறான இயற்கை அனர்த்தத்தால் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளமை தமக்கு பெரும் வேதனையாகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .