2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளை ஒன்றிணைக்கும் செயற்றிட்டம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 26 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வன்னி மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை ஒன்றிணைக்கும் செயற்றிட்டம் ஒன்றினை வவுனியா மாவட்ட தமிழ் பட்டதாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர் என அச்சங்கத்தின் அமைப்பாளர் இரா.ஜெயமோகன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவித்தாவது, 'வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கம் வன்னி தேர்தல் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தேவைகளை கருத்தில் கொண்ட வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளை பதிவு செய்கின்ற நடவடிக்கையை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து 5 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் 4 மணிவரை வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் முதலாம் மாடியில் முன்னெடுக்கவுள்ளோம். 

பட்டதாரிகளை ஒன்றிணைத்தல், அவர்களுக்கான தொழில் மற்றும் நலன்சார் செயற்பாடுகளை மேம்படுத்தல் முதலியவற்றை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள இச்செயற்பாட்டிற்கு பட்டதாரிகள் தமது கல்வித்தகுதிச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் , நற்சான்றிதழ் பத்திரம் ஆகியவற்றின் பிரதிகளுடன் சமூகமளிக்குமாறு' அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .