Super User / 2011 நவம்பர் 27 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
வன்னி ராட்சியத்தின் இறுதி மன்னனாக போற்றப்படும் பண்டார வன்னியனின் நினைவு குழு மற்றும நற்பணி மன்றம் அமைப்பது தொடர்பான கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பண்டா ரவன்னியனின் வரலாற்று பார்வை நிகழ்வும் இடம்பெறவுள்ளதுடன் பண்டார வன்னியனின் நினைவு குழு மற்றும் சமூக சேவைகளை மேற்கோள்ளும் நோக்கோடு நற்பணி மன்றம் ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
முன்னாள் வங்கியாளர் சிறிதரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுகளில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அருணா செல்லத்துரையின் பண்டார வன்னியன் தொடர்பாக கருத்துரை வழங்கவுள்ளார்.
இதேவேளை இந்நிகழ்வுகளின் போது அரசியலாளர்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் பொது மக்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கோரியுள்ளனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago