2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

பெண் சிப்பாய் தற்கொலை

Super User   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், தள்ளாடி இராணுவ முகாமில் கடமையாற்றி பெண் சிப்பாய் ஒருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

இந்த இராணுவ முகாமில் கடமையாற்றி கொண்டிருந்த குறித்த சிப்பாய், ஏ – 54 ரக கை துப்பாக்கியனால் தனக்கு தானே மார்பில் சுட்டுள்ளார்.

இதனையடுத்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

இருபத்து நான்கு வயதான தம்புள்ளையை சேர்ந்த இந்திராணி மல்லிகா என்ற பெண் சிப்பாயே தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியே இவரின் தற்கொலைக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் சடலத்தை பார்வையிட்ட மன்னார் நீதவான் கே.ஜீவராணி பிரேத பரிசோனை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .