2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வவுனியா நகர சபையின் 2011க்கான வரவு செலவுத்திட்டத்துக்கு மறுப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா நகர சபையின் அடுத்த ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டம் இன்று திங்கட் கிழமை சபைக்கூட்டத்தில் இரண்டாவது தடவையாகவும் அங்கீகரிக்கப்படவில்லை என சபையின் செயலாளர் எம் வசந்தகுமார் தெரிவித்தார்.

தலைவர் ஜி.நாதன் தலைமையில் வரவு செலவுத்திட்ட விசேட கூட்டம் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது  உப தலைவர் எம்-முகுந்தரதன் பஜட்டினை சமர்ப்பித்து பிரேரித்தார் அதனை சபை உறுப்பினர் எம்.முனாபர் வழிமொழிந்தார்.

ஏனைய சமூகமளித்திருந்த சபை உறுப்பினர்கள் ஐவர் தாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்கள். இதனை அடுத்து கூட்டம் முடிவடைந்தது என சபை செயலாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--