2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Super User   / 2012 நவம்பர் 12 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வவுனியா மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை தீடிரென அதிகரிதுள்ளது என மரக்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

தற்போது விரத காலம் ஆரம்பித்துள்ளமையே இவ்வாறான விலையேற்றத்துக்கு காரணம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

உருளைக்கிழங்கு கிலோ 160 ரூபாவும் கத்தரிக்காய் கிலோ 160 ரூபாவும் கரட் கிலோ 280 ரூபாவும் பயிற்றங்காய் கிலோ 280 ரூபாவும் கறி மிளகாய் கிலோ 240 ரூபாவும் தக்காளி கிலோ 120 ரூபாவும் பீற்றூட் கிலோ 200 ரூபாவும் பாவற்காய் கிலோ 320 ரூபாவும் கோவா கிலோ 160 ரூபாவும் பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாவும் சிறியது கிலோ 120 ரூபாவும் வெண்டிக்காய் கிலோ 120 ரூபாவுக்கும் கிலோ ஒன்று விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவத்தனர்.

இவ்வாறான விலை ஏற்றம் எதிர்வரும் மாதம் வரை நீடிக்கலாம் எனவும் அவர்கள் மேலும் தெரிவத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .