2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தம்பனைக்குளம் முத்துமாரியம்மன் ஆலய நிர்மாணப்பணி கைவிடப்பட்டுள்ளதால் மக்கள் கவலை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னார், மதவாச்சி பிரதான வீதியிலுள்ள தம்பனைக்குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தம்பனைக்;குளம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய பொருளாளர் வி.செல்வகுமாரிடம் கேட்டபோது,

'மன்னார,; மதவாச்சி பிரதான வீதியிலுள்ள தம்பனைக்குளம் பகுதியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தற்காலிகமாக காணப்பட்ட இவ்வாலயத்திற்கான நிர்மாணப் பணிகள் கடந்த 5 வருடங்களுக்கு முன்  இந்துக்களினதும் நலன் விரும்பிகளினதும் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

நிதிப்பற்றாக்குறை காரணமாக இவ்வாலயத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது இடைநடுவில் கைவிடப்பட்டது.

இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த இந்து மக்கள் இவ்வாலயத்திற்கு வந்துசெல்கின்றனர். இந்நிலையில், தற்போதைய ஆலயத்தினுள் பூஜை வழிபாடுகளின்போது அதிகளவான பக்தர்களை உள்ளடக்க முடியாத நிலையில் ஆலய நிர்வாகத்தினர் உள்ளனர்.

5 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயத்திற்கான நிர்மாணப் பணிகள் நிதிப்பற்றாக்குறை காரணமாக கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் ஆலய நிர்வாக சபையினர் பல அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X