2021 ஜனவரி 20, புதன்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களின் பணிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கம்

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

உள்ளூராட்சி மன்றங்களும் அதன் பணிகளும் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா புளியங்குளம் இராமனூரில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்களின் பணிகள் தொடர்பில் மக்கள் கேட்டறிந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களும் அதன் பணிகளும் தொடர்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா வடக்கு  மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டத்தின் கீழ் மேற்படி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நல்லாட்சியும் மக்கள் பங்களிப்பும் என்ற தொனிப்பொருளில் மனித உரிமைகள் இல்லத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்றிட்டமானது கிராம ரீதியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான தோற்றம் மற்றும் அதன் பணிகள் தொடர்பில் நூல்களும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .