2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

உடைப்பெடுத்த குளங்களை புனரமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து உடைப்பெடுத்துள்ள குளங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கமநல மற்றும் வனவிலங்குகள் பிரதியமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

மடுக்கந்த பிரதேசத்தில் உள்ள பிராணங்குளத்தை கமநல மற்றும் வனவிலங்குகள் பிரதியமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வடபகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. இவ்வாறு உடைப்பெடுத்துள்ள குளங்களின் திருத்த வேலைகள் 2 அல்லது 3 மாதங்களுக்குள் மேற்கொள்வதாகவும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X