2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வவுனியாவில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து மழையால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு, வவுனியா அரசாங்க அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை  நிவாரணங்களை வழங்கினார்.

வவுனியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 865 குடும்பங்களைச் சேர்ந்த 3,031 பேர் வெளியேறியுள்ள நிலையில், 15 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.கமலதாசன் தெரிவித்தார்.

சமைத்த உணவு பிரதேச செயலகத்தினூடாக இவர்களுக்கு வழங்கப்படுவதுடன்,  அரசாங்கத்தின்  நிவாரணப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை சென்று பார்வையிட்ட வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, பால்மா உள்ளிட்ட  உலருணவுகளையும் வழங்கினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .