2021 ஜனவரி 23, சனிக்கிழமை

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வேறு காணிகளில் வாழ விரும்புவோருக்கு காணிகளை ஒழுங்கமைக்குமாறு பணிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரட்னம்)

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு இடங்களில் வாழ விரும்பும் வவுனியா பிரதேச செயலக பிரிவை சேர்ந்த புதுக்குளம் கிராம மக்கள் சிலருக்கு அவர்களுக்கான காணிகளை ஒழுங்கமைக்குமாறு வவுனியா பிரதேச செயலாளரிடம் அனர்த்த முகாமைத்தவ அமைச்சர் மகிந்த அமரவீர பணித்துள்ளார்.

இது தொடர்பில் தான் அரசாங்க அதிபரிடம் கூறுவதாக அமைச்சர், பிரதேச செயலாளரிடம் தெரிவித்ததுடன் வீடுகள் அமைப்பதற்கு முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வழங்குவற்கு எற்பாடு செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களை பாhவையிடுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அமைச்சர் மக்களிடம் உரையாடினார். இதன்போது, 'தொடர்ச்சியாக வெள்ளப்பாதிப்பு ஏற்படுமாயின் வேற்று இடத்தில் காணி, வீடுகளை பெற்று செல்ல விருப்பமா?' என அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களிடம் வினவியபோது ஒரு சிலர் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

இதன்போது அமைச்சர் பிரதேச செயலாளருக்கு இவ்வாறு பணித்துள்ளார்.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவை சேர்ந்த களுகுண்ணாமடு விஜயபாகம கிராம மக்கள் சிலரும் தாம் வேறு காணிகளில் இருப்பதற்கு விருப்பம் தெரிவத்துள்ளனர்.

இதேவேளை புதுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதை தொடர்பில் மக்கள் அமைச்சரிடம் எடுத்துக்கூறியதற்கிணங்க அதற்கான மதிப்பீட்டினை வழங்குமாறும் தெரிவித்ததுடன் செஞ்சிலுவை சங்கத்தினூடாக பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் உத்திரவாதமளித்திருந்தார்.

இதேவேளை பாதிப்படைந்தவர்களுக்கு 1500 ரூபா வீதம் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் தேவை கருதி வழங்குமாறும் வவுனியா பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரனிடம் அவர் கூறியிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .