2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மாந்தை இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.ஜெனி)

அடை மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட மக்கள் 26 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறீஸ்கந்தகுமார் தெரிவித்தார்.

இருப்பினும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட சன்னார் மற்றும் ஈச்சலவக்கை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு இதுவரையில் எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

சன்னார் கிராமத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 684 போரும் ஈச்சலவக்கை கிராமத்தில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 668 பேரும் அடை மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல்; முகாம்களுக்குச்  செல்லாது,  தங்களது கிராமங்களிலுள்ள உயர்ந்த பகுதிகளிலும் பொதுக்கட்டிடங்களிலும் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தங்களுக்கு இதுவரையில் எந்தவித  நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.  கடந்த 3 நாட்களுக்கும் மேலாக எந்தவித உணவுப்பொருட்களுமின்றி உள்ளதாகவும்  அப்பகுதி இராணுவத்தினரே தங்களுக்கு உதவியளித்துள்ளதாகவும் இம்மக்கள் கூறினர்.

இவ்விடயம் தொடர்பில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறீஸ்கந்தகுமாருடன் தொடர்புகொண்டு கேட்டபோது,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைக்கப்பட்ட 26 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய சகல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

சன்னார், ஈச்சலவக்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல குடும்பங்களும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்குரிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சன்னார், ஈச்சலவக்கை ஆகிய கிராமங்களிலிருந்து வெள்ளத்தால் இடம்பெயராது அக்கிராமங்களிலேயே தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கான எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லையென மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் சிறீஸ்கந்தகுமார் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .