2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் அவசர மீளாய்வுக்கூட்டம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 05 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெறுக்கு தொடர்பில் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் மீளய்வு செய்யும் அவசர கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் றிஸாட் பதீயுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மக்களின் இடப்பெயர்வுகள், பாதீப்பு, நெற்பயிர்ச் செய்கையின் அழிவுகள், உடைக்கப்பட்ட குளங்கள் ஆகியவை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வெரு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்கும் வெள்ளத்தின் போது பயண்படுத்தும் தற்காப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஹுனைஸ் பாரூக் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர உட்பட திணைக்களங்களின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .