2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

தமிழ் மொழி பயிற்சியின் இறுதி நாள் வைபவம்

Kogilavani   / 2013 ஜூலை 20 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, மன்னார், மாங்குளம் பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த 62 பொலிஸார் தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்துகொண்டு வெளியெறியுள்ளனர்.

கடந்த 5 மாதகாலமாக வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை  வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் இடம்பெற்றது.

தமிழ் பிரதேசங்களில் பணியாற்றும் சிங்கள மொழியிலான பொலிஸ் அதிகாரிகள் தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளை அறிந்து செயற்படவும் அவர்களது தேவைகளை இலகுவான முறையில் பூர்த்தி செய்து கொடுக்கும் முகமாகவும் இப்பயிற்சிநெறி இடம்பெற்று வருகின்றது.

இறுதி நாள் நிகழ்வின்போது தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பொலிஸாரின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு வவுனியா, மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் எச்.விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அதிதியட்சகர் சமுத்திர ஜீவா, வவுனியா பொலிஸ் நிலைய கணக்கு ஆய்வாளர் எஸ்.இரவிச்சந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--