2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஆனையிறவில் புகையிரத நிலையத்திற்கான அடிக்கல் நடல்

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,எஸ்.சிவகருணாகரன்


யாழ். ஆனையிறவு பிரதேசத்தில்  முதற் தடவையாக புகையிர நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. தென் மாகாண மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன் வடக்குத் தெற்கு 'அன்பின் சங்ககமம் ஆனையிறவு புகையிரத நிலையம்' எனும் தொனிப்பொருளில் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, பிரதி போக்குவரத்து அமைச்சர் ரேஹன திசாநாயக்க, ஆளுநர்களான நந்தா மெதியூ, ஜி.ஏ.சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்;ட பாதுகாப்பு படைகளின் கட்டளதை; தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, வவுனியா, கிளிநொச்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தென் மாகாணத்தில் இருந்து வருகை தந்த மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தென் மாகாணத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் 22 மில்லியன்  ரூபா நிதியில்  இந்த புதிய புகையிரதம்  நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(படங்கள்: எஸ்.சிவகருணாகரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--