2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க அரசியல் கைதிகள் முஸ்தீபு

Kanagaraj   / 2013 ஜூலை 29 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

எமது விடுதலை தொடர்பாக நீதியமைச்சு அல்லது சட்டமா அதிபர் திணைக்களம் உரிய முடிவு தராவிட்டால், எதிர்வரும் 11 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளோம்  என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் அரசியல் கைதிகள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பல வருடங்களாக எந்தவிதமான தீர்மானங்களும் இல்லாமல் சிறையில் புலம்பிக்கொண்டிருக்கின்றோம்.

எம்மை விடுதலை செய்வதாகப் பல முறைகள் அதிகாரிகளினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டும், இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், நீண்ட காலம் சிறையில் உள்ளவர்கள் தொடர்பாக எதுவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை.

நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்ட சிலர் பல ஆண்டுகளாக வழக்குகள் விசாரிக்கப்படாமல், கவலைப்பட்ட வண்ணமுள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடான விடுதலை என்பது ஒருபோதும் சாத்திய்படாத விடயமாகக் காணப்படுகின்றது. 

எனவே, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள், மற்றும் வழக்குத் தாக்கல் செய்யப்படாதவர்கள் அனைவருக்கும் ஏற்றதான ஒரு தீர்மானத்தை எடுத்து, எமது பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுத்தர வேண்டும்.
குறிப்பாக உடனடியாக விடுதலை செய்ய முடியாவிட்டாலும், புனர்வாழ்வளித்தாவது விடுதலை செய்யுங்கள் என்று உங்களிடத்தில் மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது குடும்பங்கள் பல்வேறு கஸ்ட துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றன. சற்று எமது வாழ்வைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நாங்களும் வாழ ஆசைப்படுகின்றோம். அதற்கான சந்தர்ப்பத்தை எமக்குப் பெற்றுத் தாருங்கள் என வேண்டுகின்றோம்.

சம்பந்தப்பட்டவர்கள் தீர்மானம் ஒன்றை எடுக்காவிட்டால், எதிர்வரும் 11.08.2013 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்க எண்ணியுள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். என அவர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--