2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சமுர்த்தி முகாமையாளர்களுக்கும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கும்  வங்கிக் கணக்கு தொடர்பான பயிற்சிநெறியுடன் கூடிய செயலமர்வு மன்னாரில் நடைபெற்றுவருகின்றது.

சமுர்த்தி மகா சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஆங்கில மையத்தில் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமான இந்தச் செயலமர்வு எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

சமுர்த்திப் பயனாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் முகமாக இந்த பயிற்;சிநெறியுடன் கூடிய செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலமர்வில் கொழும்பு, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமுர்த்தி முகாமையாளர்களும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுமாக 90 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

சமுர்த்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் எம்.நடேசராஜா மற்றும் மன்னார் மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் கே.சசிதரனின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்று வருகின்ற இந்தச் செயலமர்வில் வளவாளர்களாக ஜ.அலியார், கே.நேசராஜா ஆகியோர் உள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கலந்துகொண்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--