2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

யாழ்தேவியில் மோதுண்டு ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

திருமுறிகண்டி, பொன்னகர் பகுதியில் யாழ்தேவி ரயிலில் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை  அதிகாலை 4.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் பொன்னகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருமுறிகண்டி பொன்னகரைச் சேர்ந்த அன்னிமுத்து கணேஸ் (வயது  65) என்பவரே விபத்தில் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--