2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வாய்ப்புக்கள் வரும் போது பயன்படுத்துவோமேயானால் வெற்றியாளர்களாக மாறுவோம்'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'உயர்வுக்கான வாய்ப்புகள் வருவதில்லை. அவ்வாறு வரும் வாய்ப்புக்களை நாம் பயன்படுத்தும்போது வெற்றியாளர்களாக மாறுவோம்' என வவனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மனப்பாங்கு விருத்தி தொடர்பான செயலமர்வு பிரதேச செயலக மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவர் இவ்வாறு தெரிவத்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'எமது பிரதேசம் முழுமையாக மீள்குடியேற்றப்பட்ட பிரதேசமாக உள்ள நிலையில் இங்குள்ள மக்களுக்கு வவுனியா வடக்கு பிரதேச செலயாக உத்தியோகத்தர்கள் சிறந்த சேவையை வழங்கினார்கள் என மக்கள் மத்தியில் இருந்து கருத்தக்கள் வரவேண்டம்; என்பதே எனது நோக்கமாகும்.

எனவே சிறந்த சேவையை வழங்குகின்ற மனநிலைக்கு எமது உத்தியோகத்தர்கள் மாற்றமடைய வேண்டும். எமது உத்தியோகத்தர்கள் எப்போதும் மக்களின் காலடியில் சென்று சேவை செய்யவும் அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கவும் தயாராக இருத்தல் வேண்டும்.

நாம் தற்போது மக்களுக்கு Nதுவையான சேவையை திறம்பட செய்து வந்தாலும் மேலும் எம்மை வளள்படுத்த வேண்டிய தேவையுள்ளது. நாம் சிறப்பாக சேவையை செய்கின்றோம் என மக்களே கூற வேண்டும். அதற்காக நாம் எமது கடமைகளை செய்ய வேண்டும்.

எமது பிரதேச மக்கள் உளப்பூர்வமாக எமது பிரதேச செலயகம் தமக்கான எந்த குறையையும் விட்டு வைக்கவில்லை என தெரிவிக்க வேண்டும்.

வீட்டிலும் பிரச்சனைகள் இருக்கலாம் அலுவலகத்திலும் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் அனைத்தையுமு; சமாந்தரமான கொண்டு செல்லக்கூடிய மனநிலையை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறான உயர்வுக்கான வாய்ப்புகள் வருவதில்லை. அவ்வாறு வரும் வாய்ப்புக்களை நாம் பயன்படுத்தும் போது வெற்றியாளர்களாக மாறுவோம்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--