2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, வேப்பங்குளம் பகுதியிலுள்ள  வீடொன்றில் தனிமையிலிருந்த பெண் ஒருவரின்  மீது இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அப்பெண் காயமடைந்துள்ளார்.

முன்னாள் கிராம அலுவலகரான சற்குணசேயோன் பாலசுந்தரி (வயது 60) என்ற பெண்ணே இத்துப்பாக்கிச் சூட்டில்  காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை  இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இப்பெண்ணின் வீட்டில் இருந்தவர்களை அழைத்தபோது இப்பெண் வீட்டின் வெளியில் வந்து பார்த்துள்ளார். இதன்போது துப்பாக்கிதாரிகள் நிற்பதைக் கண்ட இப்பெண் கதவைச் சாத்தியுள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கிதாரிகள் வீட்டின் கதவினூடாக துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் இப்பெண்ணின் கால் பகுதியில் காயம் ஏற்பட்ட  நிலையில், இவர்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .