2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் கால்நடைகளுக்கு தற்காலிகத் தடை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 26 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கால்நடைகளை ஏனைய மாவட்டங்களுக்கு கொண்டுசெல்வதற்கும் ஏனைய  மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சிக்கு கால்நடைகளை கொண்டுவருவதற்கும் மார்ச்; முதல் வாரத்திலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.கௌரிதிலகன்  தெரிவித்தார்.

தற்போது கால்நடைகளுக்கு கால்வாய் நோய் பரவுவதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தடை விதிப்பதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கால்நடைகளை கால்வாய் நோயிலிருந்து பாதுகாக்க முடியுமெனவும் அவர் கூறினார்.

கால்வாய் நோய்;; குறைந்த  பின்னர் மேற்படி தடை நீக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அநுராதபுரத்தில் பரவிய கால்நோய் தற்போது வடமாகாணத்திலும் பரவியுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .