2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சிவில் சமூகக் குழுக்களை பலப்படுத்தும் முகமாக செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாண சிவில் சமூகக் குழுக்களை பலப்படுத்தும் முகமாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில்  மன்னார் ஆகாஸ் விடுதியில் சனிக்கிழமை (29)  விசேட செயலமர்வு நடைபெற்றது.

அத்துடன்,  தெரிவுசெய்யப்பட்ட சிவில் சமூக குழு பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டைகளையும் சான்றிதழ்களையும் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வழங்கினார்.

மேற்படி சிவில் சமூகக் குழுக்களை பலப்படுத்தும் முகமாக இக்குழுக்களிலுள்ள பிரதிநிதிகள் கிராம மட்டத்தில் மக்களுடன் இணைந்தும் பொலிஸாருடன் இணைந்தும் செயற்படும் விதம் குறித்து வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர விளக்கமளித்தார்.

இச்செயலமர்வில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பி.ஜெ.கெ.எஸ்.விக்கிரமசிங்க, வடமாகாண பொலிஸ் நிலையங்களிலுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சர்வமதத் தலைவர்கள், கல்வி அதிகாரிகள், ஓய்வுபெற்ற திணைக்கள அதிகாரிகள், திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கி மன்னார், வவுனியா ஆகிய மவட்டங்களிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் சிவில் சமூக குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு குழுவில் 7 பேர் படி உள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .