2021 மார்ச் 06, சனிக்கிழமை

படகு விபத்தில் பெண் ஊடகவியலாளர் பலி

Kogilavani   / 2014 மார்ச் 31 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, மாமடு குளத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்த மூவரில் ஒருவர், இளம் பெண் ஊடகவியலாளர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

வவுனியா, செட்டிகுளத்தை பிறப்பிடமாகவும் பட்டக்காடை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் ஜான்ஸி (வயது 26) என்ற பெண் ஊடகவியலாளரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர், இலங்கை இதழியல் கல்லூரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அச்சு ஊடகத்தில் கல்வி பயின்று பின், தினகரன் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் ஊடகவியாளராக பணியாற்றியுள்ளார்.

திருமணம் முடித்து நான்கு மாதங்களே ஆன நிலையில் இவர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

 • DIXCI Monday, 31 March 2014 09:59 AM

  வற்றாத சிரிப்போடு வாழ்ந்த எம் உறவே!
  நீ பேசியவை இன்றும் எம் காதில் ஒலிக்கின்றது.
  எம்மை நீங்கி நீ எங்கு சென்றாலும்
  உன் நினைவுகள் எம்மை விட்டு நீங்குவதில்லை...

  Reply : 0       0

  shagthi Monday, 31 March 2014 10:26 AM

  எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .