2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்: டெனிஸ்வரன்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


'அரசியல் சூழ்ச்சிகளுக்கப்பால் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என வட மாகாண போக்குவரத்து மீன்பிடி வாணிப அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் நிர்வாக தெரிவு முன்னைய தலைவர் கனகரத்தினம் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'தனியார் போக்குவரத்துச் சங்கம் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களை இலவசமாக ஏற்றி இறக்குவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மிக முக்கியமான இடமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதனால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும்போது இன, மத, பேதமின்றியும் அரசியல் தலையீடுகள் இன்றியும் மேற்கொள்ளப்படவேண்டும்' என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,மாகாணசபை உறுப்பினர்களான அ.ரவிகரன், அன்ரனி ஜெகநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .