2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

வீதி புனரமைப்பு பணி விரைவில் : வடமாகாண அமைச்சர்கள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு மேற்கு கிராம மக்களை வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மற்றும் வட மாகாண விவசாய கால்நடைகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்  வெள்ளிக்கிழமை(4) நேரில் சென்று சந்தித்தனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட  பாலியாறு மேற்கு கிராமத்துக்கு செல்லும் 1.7 கிலோ மீற்றர்  பிராதான பாதை நீண்டகாலமாக பழுதடைந்திருப்பதையும் அதனால் அவ்வழியாக செல்லும் பொது மக்களும் பாடசாலை மாணவர்களும் மழை காலங்களில் மிகவும் அசௌகரியங்களை  சந்திப்பதாகவும் வடமாகாண அமைச்சர்களிடம் தெரியப்படுத்தினர்.

பாலியாறு மேற்கு கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதை திருத்த பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர்கள் மக்களுக்கு உறுதி மொழி வழங்கினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .