2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா

Super User   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் 'செந்தமிழ்' முன்பள்ளிக்கு வேள்ட் விசன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் முன்பள்ளி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (09) நடைபெற்றது.

இந்த அடிக்கல்லினை வடமாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.சிவநாதன் நாட்டிவைத்தார்.

மேற்படி முன்பள்ளியினை அமைப்பதற்கு வேள்ட் விசன் நிறுவனம் கட்டிட உபகரணங்களை வழங்கவுள்ளதுடன், நிர்மாண வேலைகளை அந்த முன்பள்ளி சார் நலன்விரும்பிகள் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வேள்ட் விசன் அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--