2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மதுபானம் கொண்டுசென்ற ஒருவருக்கு தண்டம்; மூவருக்கு பிணை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் கொண்டுசென்ற குற்றச்சாட்டில் கைதான  நால்வரில் ஒருவருக்கு 100,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன்,  ஏனைய மூவரையும்  தலா 100,000 பெறுமதியான சரீரப் பிணையில்; செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து 384 பியர் ரின்கள், 750 மில்லிலீற்றர் சாரயம் 12 போத்தல்கள், 180 மில்லிலீற்றர் சாரயம் 500 போத்தல்கள் ஆகியவற்றை தனியார் பஸ் வண்டியொன்றில் கிளிநொச்சிக்கு கொண்டுசென்ற குற்றச்சாட்டில் குறித்த நால்வரும் புதன்கிழமை  (09) இரவு பரந்தன் சந்தியில்  கிளிநொச்சி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், குறித்த பஸ் வண்டியை சோதனை செய்து அதிலிருந்த மதுபான வகைகளை கைப்பற்றினர் 
நால்வரில் ஒருவர் தான் குற்றவாளியெனவும் மற்றைய மூவரும் தாங்கள் சுற்றவாளியெனவும் நீதிமன்றத்தில்  கூறினர். இந்நிலையில், குற்றத்தை ஒத்துக்கொண்ட நபருக்கு 100,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. ஏனைய மூவரையும் தலா 100,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

இந்த வழக்கின் பூரண விசாரணை  எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .