2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சிறுமியின் சத்திரசிகிச்சைக்கு வடமாகாண ஆளுநர் நிதியுதவி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுமித்தி தங்கராசா
 
மன்னார் அடம்பன் பகுதியினைச் சேர்ந்த அனஸ்ர இவானி (05) என்ற சிறுமியின் சத்திரசிகிச்சைக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி 3 இலட்சம் ரூபா நிதியுதவியினை இன்று புதன்கிழமை (16) வழங்கினார்.
 
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஜய வருட புத்தாண்டு நிகழ்வில் வைத்தே இந்நிதி குறித்த சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இச்சிறுமியின் சத்திரசிகிச்சைக்கென வடமாகாண ஆளுநர் நிதியிலிருந்து 6 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் முதற்கட்ட சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று(16) சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து சிறுமிக்கு மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சையின் பின்னர் மிகுதி நிதியும் வழங்கப்படும் என ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.
 
இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் மத தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--