2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லம் திறப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கிளிநொச்சி திருவையாற்றுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லக் கட்டிடத் தொகுதி புதன்கிழமை (16) திறந்து வைக்கப்பட்டது.

ஏற்கனவே இருந்த பழைய கட்டிடத்தின் இடத்திலே இந்தக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் இயக்குநர் குமரன் பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகபீட முன்னாள் பீடாதிபதி கலாநிதி கே.தேவராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த இல்லக் கட்டிடத் தொகுதியில் உணவு விடுதி, தங்குமிட விடுதி, பொழுதுபோக்கு விடுதி மற்றும் அலுவலகம் என நான்கு பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிகழ்வின் இறுதியில் சிறுவர் இல்ல சிறுவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் சி.விஸ்வரூபன், கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் கே.முருகவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

செஞ்சோலைச் சிறுவர் இல்லம் கடந்த ஆண்டு (2013) ஜனவரி மாதம் 20 ஆம் திகதி புதிதாகத் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .