2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கிராம அபிவிருத்தி சங்கங்களின் கூட்டம் பிற்போடப்பட்டது

Super User   / 2014 ஏப்ரல் 22 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு நடக்கவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக வவுனியா கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ம. தேன்மொழி செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சினால் எதிர்வரும் 24 ஆம் திகதி வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சருக்கும் பா. டெனிஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தவிர்க்க முடியாத காரணத்தால் இச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதுடன் கூட்டத்திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--