2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

நிதி மோசடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை : வடமாகாண அமைச்சர்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

கிராம மட்ட அமைப்புக்களின் சொத்துக்கள் நிதிகளை மோசடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்தார்.

கிராம அமைப்புகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் தெரிவி;துள்ளதாவது,

ஒரு நாட்டின் முதுகெலும்பாக செயல்படுவது கிராம மட்டங்களில் செயற்ப்படும் அமைப்புக்களாகும். அந்த கிராம மட்ட அமைப்புக்களில் பெரும் பங்காற்றி வருவது கிராம அபிவிருத்தி சங்கங்களும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுமாகும். இந்த இரண்டும் தமது கடமைகளை பொறுப்புடன் செயற்படுத்தும் போது ஒரு கிராமத்தின் அபிவிருத்தியை இலகுவாக்க முடியும். அந்த வகையில் தற்போது வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்திற்கு உட்பட்ட சகல சங்கங்களும் தங்களது நியதிச் சட்டங்களுக்கேற்ப செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வடமாகாண சபையின் கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு உட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. இருப்பினும் பல கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினதும் நிதிகளில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சில சங்கங்களின் தலைவர்கள் நிதிகளை தாமே கையிருப்பில் வைத்திருப்பதாகவும் அந்த நிதிகளை முறையாகப் பயன்படுத்தாது தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும் நிர்வாக சபை கூட்டங்களையோ பொதுக்கூட்டங்களையோ நடத்தாது கணக்குகளை சீர் செய்யாது அராஜகம் செய்வதாகவும் மக்கள் முறையிட்டுள்ளனர்.

அத்துடன் மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு வழங்கப்பட்ட சுழற்சிக் கடன்களின் அறவீடுகளை உரிய அதிகாரிகளிடம் வழங்காது தாமே வைத்திருந்து வட்டிக்குக் கொடுப்பதும் பல முறைகேடுகளை மேற்கொள்வதாகவும் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் உடன் விசாரணைகளை நடாத்தி கணக்குகளை சீர் செய்யத் தவறும் பட்சத்தில் உரிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன் சம்மந்தப்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்க நிர்வாகம் மீது உடனடியாக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக்குட்பட்டு தங்களது பிள்ளைகளை பராமரிக்க முடியாது போராடும் மக்கள் ஒரு புறம் இருக்க பதவிகளையும் செல்வாக்குகளையும் வைத்துக்கொண்டு பல கிராம அபிவிருத்தி சங்கங்க  மாதர் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் தான் தோன்றித் தனமாக நடப்பது மிகவும் வேதனை அளிக்கின்றது இவ்வாறான கிராமங்களை சேர்ந்த மக்கள் உங்கள் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகங்களை தேர்ந்தெடுக்கும் போது இன மத சாதி பேதமில்லாமல் அரசியல் செல்வாக்குகளுக்கு  உட்படாது செயற்படுபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அத்துடன் கிராம அபிவிருத்திச் சங்க விதிகளை மீறி செயர்ப்படுபவர்கள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு உடன் தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 தற்போது பல கிராமங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதாவது பாரிய பிரச்சினையாக உள்ள காணி அபகரிப்பு மண் அகழ்வு கசிப்பு உற்பத்தி சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் ரீதியான வன்புணர்வுகள் களவுகள் வீதிகள் புனரமைக்கப்படாமை  மற்றும் நிர்ணயமற்ற விலைகள்  பல்வேறு விதமான பிரச்சினைகள் உள்ளன. இவற்றினை கிராம மட்ட சங்கங்கள் மூலமாகவே இலகுவாக தீர்க்கவும் கையாளவும் முடியும்.

எனவே, இனிவரும் காலங்களில்  கிராம மட்ட சங்கங்களை பலப்படுத்துவதோடு பல்வேறு பட்ட திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம். அதற்கு கிராம மட்ட சங்கங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--