2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன் 


கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கரைச்சி வடக்கு விவசாயிகள் தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன்; வெள்ளிக்கிழமை (25) திறந்து வைத்தார்.


அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் கட்டப்பட்ட இந்த விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 20 இலட்சம் பெறுமதியான நெல் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தின் மூலம் கிளிநொச்சி விவசாயிகள் தரமான விதை நெல்லைப் பெற்றுக்கொள்ள வழியேற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--