2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

போரினால் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவதில் கல்விச் சமுகத்துக்கு பெரும் பொறுப்புண்டு: சிவசக்தி ஆனந்தன்

Menaka Mookandi   / 2014 ஜூலை 02 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

போரினால் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவதில் கல்விச்சமுகத்துக்கு பெரும் பொறுப்புண்டு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

2012ஆம், 2013ஆம் ஆண்டுகளில் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்தில் நேற்று (01.07.2014 ) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வித்தியாலயத்தின் முதல்வர் ப.கெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றுகையில்,

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவு போரினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் மாணவர்கள் உட்பட வகைதொகையற்ற உயிர்களை யுத்தம் காவு கொண்டு விட்டது. பல உறவுகளின் உடல் அவயங்களையும் பறித்தெடுத்துவிட்டது.  

எங்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தனை துயரங்கள், இழப்புகளிலிருந்தும் விடுபட்டு, ஒரு புதிய சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் அதிபர்கள் ஆசிரியர்கள் அடங்கலான கல்விச்சமுகத்துக்கு பாரிய பொறுப்புண்டு.

இந்த பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறைகள், பௌதீக வளங்கள் பற்றாமை, ஆசிரியர் விடுதிகள் இல்லாமை, போக்குவரத்து பாதைகள் சீரின்மை, ஆசிரியர்களுக்கான வேதன ஊதியங்கள் அதிகரிக்கப்படாமை, போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் இன்மை என்று பல்வேறு குறைபாடுகள், இடர்நிலைமைகளுக்கு மத்தியிலும், அந்த பொறுப்பை நன்கு உணர்ந்து மிகுந்த அர்ப்பணிப்போடு, இப்பிரதேச அதிபர்கள் ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர்.

அதில் சின்னடம்பன் பாரதி வித்தியாலயமும் அடங்கும். இந்த வித்தியாலயத்தினுடைய கல்வி பரீட்சை பெறுபேறுகள் குறிப்பாக க.பொ.த.சாதாரணதரம் மற்றும் உயர் தரப்பெறுபெறுகளும், ஏனைய கலை கலாசார விளையாட்டு துறைகளின் அடைவு மட்டங்களும் மிகவும் சிறப்பாக இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைவதாகவும், சிறப்பாக அத்தேர்ச்சி அடைவு மட்டங்களை வெளிப்படுத்திய மாணவர்கள், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்து பாராட்டு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். 

வடமாகாணசபை உறுப்பினர்கள் ஆர். இந்திரராஜா,எம்.  தியாகராஜா, வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலர் வி. ஆயகுலன், நெடுங்கேணி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் செல்வரட்ணம், ஜெயரூபன், இவர்களுடன் ஓய்வு பெற்ற வவுனியா வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.வியாகமூர்த்தி, வவுனியா வடக்கு உதவி கல்வி பணிப்பாளர்;) கோ.வாகீசன் ஆகியோரும், வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .