2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

வெங்காய வெடி வெடித்து இளம் குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 03 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின்  தச்சனா மருதமடுப் பகுதியில் வெங்காய வெடி வெடித்ததால், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தோமஸ் ஸ்ரீபன் (வயது 31) என்பவர் புதன்கிழமை (02)  மரணமடைந்ததாக மடு பொலிஸார் தெரிவித்தனர்.

விலங்குகளை வேட்டையாடும் நோக்கில்  வீட்டில்  வெங்காய வெடிகளை தயாரித்துக்கொண்டிருந்தபோது  இதிலொன்று  தவறுதலாக வெடித்தது. இதன்போது  படுகாயமடைந்த இவர், முருங்கன் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்; மரணமடைந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில்  விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .