2021 மே 12, புதன்கிழமை

எரிகாயமடைந்த கணவனும் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 29 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியிலுள்ள  வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிகாயமடைந்த கணவனும் புதன்கிழமை   (28) உயிரிழந்ததாக வவுனியா பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்த பாலச்சந்திரன் கஜேந்திரன் மற்றும் அவரது மனைவியான கஜேந்திரன் சுதாஜினியும்  நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை  எரிகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்தார்.

இந்த  நிலையில், கணவனும் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இந்த தீ விபத்தின்போது  வீட்டு அறையிலிருந்த கட்டில், மின்விசிறி மற்றும் இதர பொருட்களும் அறைக்கு முன்பாக இருந்த சாய்மனைக்கதிரையும் முழுமையாக எரிவடைந்தன.

இந்த தீ விபத்து தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், வவுனியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .