2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'மூன்று தடவைகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 29 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மூன்று தடவைகளுக்கு மேல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களான  விசேட தேவைக்குட்பட்ட 22 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'எமது மக்கள் இப்போது தெளிவான அரசியல் சிந்தனையை கொண்டுள்ளார்கள். சுயநலத்துக்காகவும் அடுத்துவரும் தேர்தலை முன்னிலைப்படுத்தியும் வேலை செய்யும் அரசியல்வாதிகளை நன்கு புரிந்துவைத்துள்ளார்கள்.

எனது தனிப்பட்ட கருத்து, இனிவரும் காலங்களில் ஏற்கெனவே நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு மூன்று தடவைகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளேன்.

இன்று புதிய அரசியல் கலாசாரம் தோன்றியுள்ளது. இளைஞர் சமூகத்துக்கு இடத்தை விட்டுக்கொடுக்கவேண்டியது எமது கடமையாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .