Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்திலுள்ள 247 வீடுகள் யு.என்.கபிரேட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வீட்டைத் திருத்துவதற்கு 1 இலட்சம் ரூபாய் தொடக்கம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதுடன், வீடுகள் ஒவ்வொன்றையும் திருத்துவதற்கான தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 15 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சுமார் 2,744 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தக் குடும்பங்களின் முக்கிய தேவைகளில் ஒன்றான வீட்டுத்தேவையானது பல்வேறு அமைப்புக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யு.என்.கபிரேட் நிறுவனத்தால் 316 வீடுகளும் நேப் திட்டத்தின் கீழ் 178 வீடுகளும் சர்வோதயம் ஊடாக 17 வீடுகளும் இந்திய மாதிரி வீட்டுத்திட்டத்தின் கீழ் 50 வீடுகளும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் 784 வீடுகளும் புதிதாக அமைக்கப்பட்டன. இதனை விட, 324 வீடுகள் யு.என்.கபிரேட் நிறுவனத்தால் பகுதி திருத்தி; கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலும் ஒருதொகுதி வீடுகள் பகுதியளவில் திருத்தவேண்டிய நிலையில் இருப்பதால், அவற்றில் 247 வீடுகள் தற்போது திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .