Menaka Mookandi / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடலில் நிலவும் கடும் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் எவரும் கடந்த நான்கு நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா வியாழக்கிழமை (05) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 26 கடற்றொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வட்டுவாகல் கடல்நீர் ஏரியில் இறால்பிடி தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் அதிகளவான மீனவர்கள் இறால் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். நாரையன் எனப்படும் வெள்ளை நிற இறால் அதிகமாக இங்கு பிடிக்கப்படுகின்றது.
வட்டுவாகல் கடல்நீரேரி கடலுடன் இணைக்கும் முகத்துவாரம், இம்மாத இறுதிக்குள் மூடப்படும். கடல்நீரேரிக்குத் தேவையான உவர்நீர் வருவதற்காக தற்போது திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
21 minute ago
37 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
46 minute ago
1 hours ago