2021 மே 06, வியாழக்கிழமை

மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் சிறிய குளம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் கெங்காதரன் குடியிருப்பு பகுதியில் சோபா நிறுவனத்தின் நிதியுதவியில் அந்தவூர் மக்களின் பங்களிப்புடன் சிறிய குளம் ஒன்று அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த குளம் அமைப்பதற்கு பணி புரியும் ஒருவருக்கு மணித்தியாலத்துக்கு 100 ரூபாய் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 4 மணித்தியால வேலை ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. அக்கராயன் மத்தி, அக்கராயன் கிழக்கு, கெங்காதரன் குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 பொதுமக்கள் குளம் அமைப்பதற்காக பணிபுரிகின்றனர்.

இவர்களின் முயற்சியால் 100 மீற்றர் நீளமாக குளக்கட்டு தற்போது கட்டப்பட்டுள்ளது. வரட்சி காலத்தில் குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கும் இந்தக் கிராமத்துக்கு, இந்தக் குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் நிலத்தடி நீரைப் பேணக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.

இந்தக் குளம் அமைக்கப்பட்ட பின்னர், கெங்காதரன் குடியிருப்பிலுள்ள 160 குடும்பங்களின் மேட்டுநிலச் செய்கைக்கான வாய்ப்பும் ஏற்படும் அக்கராயன் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .